/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மிதிவண்டி போட்டியில் பங்கேற்க அழைப்பு
/
மிதிவண்டி போட்டியில் பங்கேற்க அழைப்பு
ADDED : ஜன 02, 2025 06:20 AM
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அண்ணா மிதிவண்டி போட்டிகள் வரும் 4ல் நடக்கிறது.
இதுகுறித்து கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு : தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த தினத்தை முன்னிட்டு, வரும் 4ம் தேதி மூன்று பிரிவுகளாக நடத்தப்பட உள்ளது.
போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவியர்கள் இந்தியாவில் தயாரான சாதாரண சைக்கிள்களை பயன்படுத்த வேண்டும். கீர் உள்ள சைக்கிள்களை பயன்படுத்தக்கூடாது. ஆதார் அட்டை நகல் கொண்டு வரவேண்டும்.
பள்ளி தலைமையாசிரியரிடமிருந்து வயது சான்றிதழ் பெற்று வர வேண்டும். வீரர், வீராங்கனைகள் அரை மணி நேரத்திற்கு முன்பாகவே போட்டி துவங்கும் இடத்திற்கு சைக்கிள்களுடன் வரவேண்டும்.
மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி 4ம் தேதி காலை 7:00 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி கச்சிராபாளையம் சாலை வழியாக சென்று மீண்டும் கலெக்டர் அலுவலகத்தில் முடிவடைகிறது.
எதிர்பாராத விபத்துகளுக்கும் தனிப்பட்ட பொது இழப்புகளுக்கும் பங்கு பெறும் மாணவ, மாணவிகளே முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும்.
போட்டியில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறுபவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுத் தொகையாக தலா ரூ.5,000, ரூ.3,000-, ரூ.2,000 மற்றும் 4 முதல் 10 இடம் வரை வெற்றி பெறுவர்களுக்கு சான்றிதழ் மற்றும் தலா ரூ.250- வீதம் பரிசுத் தொகை வழங்கப்படும்.
அனைத்து வீரர், வீராங்கனைகள் பிறப்பு சான்று, ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு புத்தக நகல் சமர்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு-இளைஞர் நலன் அலுவலரை 74017 03474 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

