/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
யூக்கலிப்டஸ் மரங்கள் வளர்ப்பில் முறைகேடு; சத்தம் இன்றி 'சாப்பிடும்' அதிகாரிகள்
/
யூக்கலிப்டஸ் மரங்கள் வளர்ப்பில் முறைகேடு; சத்தம் இன்றி 'சாப்பிடும்' அதிகாரிகள்
யூக்கலிப்டஸ் மரங்கள் வளர்ப்பில் முறைகேடு; சத்தம் இன்றி 'சாப்பிடும்' அதிகாரிகள்
யூக்கலிப்டஸ் மரங்கள் வளர்ப்பில் முறைகேடு; சத்தம் இன்றி 'சாப்பிடும்' அதிகாரிகள்
ADDED : ஜன 21, 2025 06:44 AM
கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் மேற்கு எல்லையாக உள்ள கல்வராயன் மலையில் தொடங்கி கச்சிராயபாளையம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, சின்னசேலம், தியாகதுருகம், ரிஷிவந்தியம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை வரை தரைக்காடுகள் காணப்படுகின்றன.
இதிலிருந்த இயற்கை காடுகள் பெரும்பகுதி அழிக்கப்பட்டு வியாபார நோக்கில் யூகலிப்டஸ் மரங்கள் வளர்க்கப்படுகின்றன.
இவை பேப்பர் உற்பத்திக்காக அறுவடை செய்து அனுப்பப்படுகிறது. யூக்கலிப்டஸ் கன்றுகளை உற்பத்தி செய்து காடுகளில் நடவு செய்து வளர்த்து அறுவடை செய்யும் வரை வனத்துறையினர் பராமரிக்கின்றனர். ஆனால் இதில் கணக்கில் வராமல் மிகப்பெரிய முறைகேடு நடந்தேறி வருகிறது.
பேப்பர் உற்பத்திக்கு தகுந்த அளவில் மரங்கள் வளர்ந்ததும் அவை சுழற்சி அடிப்படையில் அறுவடை செய்யப்பட்டு ஆண்டுதோறும் பேப்பர் மில்லிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஆனால் இவைகள் இயற்கையாக பெய்யும் மழை ஈரத்தை கொண்டு வளர்வதால் கோடை காலத்தில் தண்ணீர் இன்றி பல மரங்கள் காய்ந்து விடுகின்றன.
அவ்வாறு பட்டுப்போன மரங்களை முறையாக கணக்கிட்டு அவைகளின் மதிப்பீட்டுக்கு ஏற்றபடி டெண்டர் விட்டு அறுவடை செய்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தை அரசு வருவாயில் சேர்க்க வேண்டும்.
ஆனால் ஒரு சிறு பகுதி காய்ந்து போன மரங்கள் மட்டுமே கணக்கில் கொண்டு வரப்படுகிறது. இதில் பல்லாயிரக் கணக்கான மரங்கள் கணக்கு காட்டாமல் தனியாருக்கு விற்பனை செய்து அதிகாரிகள் சிலர் லாபம் பார்த்து வருகின்றனர்.
அதேபோல் நன்கு விளைந்து அறுவடை செய்த மரங்களின் அடி வேர்களை அப்புறப்படுத்தி எடுப்பதிலும் பல்வேறு முறைகேடுகள் நடக்கிறது.
அவைகளும் மிகக் குறைந்த விலைக்கு டெண்டர் விட்டு தனியாருக்கு பெரிய லாபத்தில் கொடுக்கின்றனர். இதன் மூலம் கிடைக்கும் கமிஷன் பணத்தை அதிகாரிகள் சிலர் பிரித்துக் கொள்கின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் இது போன்ற முறைகேடுகள் வெளியில் தெரியாமல் சத்தமின்றி அரங்கேறுகிறது.
அதேபோல் அறுவடை செய்யப்படும் மரங்கள் முறையாக கணக்கில் கொண்டுவரப் பட்டு சம்பந்தப்பட்ட பேப்பர் மில்லுக்குதான் செல்கிறது என்பதற்கான உத்தரவாதமும் இல்லை என்று பொதுமக்கள் தரப்பில் குற்றம் சாட்டு கின்றனர். இதனால் பல ஆண்டுகளாக அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இயற்கையான காடுகளை அழித்துவிட்டு யூகலிப்டஸ் மரங்களை நடவு செய்து வளர்ப்பதால் இப்பகுதியில் மழை குறைந்து போனதாக ஆதங்கப்படும் விவசாயிகள், இம்மரங்களை வளர்ப்பதால் வனத்துறையினருக்கே லாபம் கிடைப்பதாகவும் தாங்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளதாகவும் குமுறுகின்றனர்.

