/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
நீர் வரத்து பாசன வாய்க்கால்கள் துார்ந்து புதர் மண்டிய அவலம்
/
நீர் வரத்து பாசன வாய்க்கால்கள் துார்ந்து புதர் மண்டிய அவலம்
நீர் வரத்து பாசன வாய்க்கால்கள் துார்ந்து புதர் மண்டிய அவலம்
நீர் வரத்து பாசன வாய்க்கால்கள் துார்ந்து புதர் மண்டிய அவலம்
ADDED : நவ 03, 2024 04:24 AM

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் ஏரி பாசான வாய்க்காலில் புதர்கள் மண்டி ஏரிக்கு நீர் வரத்து பாதிக்கும் அபாயம் இருப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
சின்னசேலத்தில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. இந்த ஏரியின் நீர்வரத்து வாய்க்கால்கள் அனைத்தும் முழுமையான பராமரிப்பு இல்லாததால் முற்றிலுமாக துார்ந்துபோய் நீர் வரத்திற்கு வழியின்றி உள்ளது.
இதனால் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்களின் விளை நிலங்களுக்கு நீர் வராமல் பயிர்கள் காய்ந்து போகும் என அச்சமடைந்துள்ளனர்.
கடந்த ஆண்டு பொதுபணித்துறை அதிகாரிகளின் வரத்து வாய்க்கால்களை துார்வாரியதால், பல ஆண்டுகளாகவே நீர் நிரம்பாமல் காய்ந்து கிடந்த இந்த எரி நிரம்பி, கோடி வழியாக உபரி நீர் வெளியேறும் சூழல் ஏற்பட்டது.
ஆனால் இந்த ஆண்டு, பருவமழைக் காலம் துவங்கியுள்ள நிலையில், சின்னசேலம் ஏரியின் கோடி புகும் பகுதியில் உள்ள வடிகால் வாய்க்கால்கள் மற்றும் எலவடி ஏரியிலிருந்து நீர் வரும் வரத்து வாய்க்கால்கள் முழுவதும் புதர் மண்டி துார்ந்து கிடக்கிறது.
இதனால், ஏரிக்கு நீர் வருவதற்கும் வழியின்றி பாதிப்படைகிறது. அதேபோல் வெளியேறும் நீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் அருகிலுள்ள வயல்களில் தேங்கி, விவசாயத்திற்கு பயன்படாமல் போகும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
எனவே, சின்னசேலம் ஏரியின் நீர்வரத்து மற்றும் வடிகால் வாய்க்கால்களை சீரமைக்க, பொதுப்பணி துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.