/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
இலுப்பையூர் ஒன்றிய நடுநிலைப்பள்ளி சத்துணவு கூடத்திற்கு ஐ.எஸ்.ஓ., சான்று

ADDED : பிப் 18, 2024 12:22 AM

கள்ளக்குறிச்சி: இலுப்பையூர் ஊராட்சி நடுநிலைப் பள்ளி சத்துணவு கூடத்திற்கு ஐ.எஸ்.ஓ., தரச்சான்று வழங்கப்பட்டது.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் உள்ள சத்துணவு கூடங்களை மேம்படுத்திடவும், சுகாதாரமான உணவை மாணவர்களுக்கு வழங்கிடவும்,முதல் கட்டமாக 100 பள்ளிகளில் உள்ளசத்துணவு சமையலறைகளுக்கு ஐ.எஸ்.ஓ., தரச்சான்று வழங்கிட உத்தரவிட்டு ஆய்வு பணிகள் நடந்தது.
இதில் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட கியூஸ்ட்டு நிறுவனத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் உள்ளிட்ட தணிக்கை குழுவினர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
அதில் திருநாவலுார் ஒன்றியம் இலுப்பையூர் ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் உள்ள சத்துணவு கூடத்திற்கு ஐ.எஸ்.ஓ., தரச்சான்று வழங்க பரிந்துரை செய்தனர். அதன்படி, கலெக்டர் ஷ்ரவன்குமார், இலுப்பையூர் நடுநிலைப் பள்ளிக்கு தரச்சான்று வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் இந்திராதேவி, பி.டி.ஓ., சொக்கநாதன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (சத்துணவு) செல்வி, சத்துணவு அமைப்பாளர் ஜெயா மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.