ADDED : ஏப் 14, 2025 06:45 AM

ரிஷிவந்தியம் : பகண்டை கூட்ரோட்டில் கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட, 614 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு, வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, ஆணையை வழங்கினார்.
தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் பெருமாள், பாரதிதாசன், துரைமுருகன், சேர்மன் வடிவுக்கரசி, துணை சேர்மன் சென்னம்மாள், தாசில்தார் வெங்கடேசன், பி.டி.ஓ.,க்கள் துரைமுருகன், ஜெகநாதன் முன்னிலை வகித்தனர். துணை பி.டி.ஓ., தினகர்பாபு வரவேற்றார்.
தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் ராஜூ, ஊராட்சி தலைவர்கள், கிருஷ்ணபிரசாத், கீதா, கோமதி, செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., பேசுகையில், 'தமிழகத்தில் அதிக வளர்ச்சி திட்டப்பணிகள் நடந்த, 10 சட்டசபை தொகுதிகளில் ரிஷிவந்தியமும் இருக்கும். கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க., ஆட்சியை ஒப்பிடும் போது, பலநுாறு மடங்கு பணிகள் தி.மு.க., ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளன' என்றார்.

