ADDED : ஏப் 26, 2025 06:17 AM

கள்ளக்குறிச்சி : சின்னசேலம் பி.டி.ஓ., அலுவலகத்தில் கலைஞர் கனவு இல்ல திட்ட பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஒன்றிய சேர்மன் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். துணை சேர்மன் அன்புமணிமாறன், தி.மு.க., ஒன்றிய செயலாளர் கனகராஜ், பி.டி.ஓ., ரங்கராஜன் முன்னிலை வகித்தனர்.
பி.டி.ஓ., சவரிராஜ் வரவேற்றார். நிகழ்ச்சியில், கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட, 277 பயனாளிகளுக்கு ரூ.9.70 கோடி மதிப்பில் வீடு கட்டுவதற்கான பணி ஆணை வழங்கப்பட்டது. இதையடுத்து, பயனாளிகள் வீடு கட்டும் பணியை உடனடியாக துவங்க அறிவுறுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர்கள் நதியா ராஜேஷ், ராஜேஸ்வரி, சக்திவேல், தெய்வானை, சுதா மணிகண்டன், அவைத்தலைவர் தங்கவேல், ஒன்றிய துணை செயலாளர்கள் சோலைமுத்து, கண்ரோஸ், தமிழ்செல்வி கோவிந்தன், ஊராட்சி தலைவர்கள் முருகேசன், அழகுவேல், சசிகலா தனவேல், ஜெயமணி, சிவஞானம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். துணை பி.டி.ஓ., பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.