/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கனவு இல்லம் பயனாளிகளுக்கு வேலைக்கான உத்தரவு வழங்கல்
/
கனவு இல்லம் பயனாளிகளுக்கு வேலைக்கான உத்தரவு வழங்கல்
கனவு இல்லம் பயனாளிகளுக்கு வேலைக்கான உத்தரவு வழங்கல்
கனவு இல்லம் பயனாளிகளுக்கு வேலைக்கான உத்தரவு வழங்கல்
ADDED : ஏப் 23, 2025 11:05 PM

தியாகதுருகம்:
தியாகதுருகம் ஒன்றியத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 600 பயனாளிகளுக்கு வேலைக்கான உத்தரவு வழங்கப்பட்டது.
தியாகதுருகம் ஒன்றியத்தில் உள்ள 40 ஊராட்சிகளில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், 600 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு தலா ரூ.3.5 லட்சம் என மொத்தம் 600 பேருக்கு ரூ. 21 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து பயனாளிகளுக்கு வேலைக்கான உத்தரவு வழங்கும் நிகழ்ச்சி தியாகதுருகம் பி.டி.ஓ., அலுவலகத்தில் நடந்தது.
ஒன்றிய சேர்மன் தாமோதரன் தலைமை தாங்கினார். துணை சேர்மன் நெடுஞ்செழியன், அட்மா குழு தலைவர் அண்ணாதுரை, பி.டி.ஓ.,க்கள் கொளஞ்சிவேல், செந்தில் முருகன் முன்னிலை வகித்தனர். துணை பி.டி.ஓ., அண்ணாதுரை வரவேற்றார். தேர்வு செய்யப்பட்ட 600 பயனாளிகளுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டும் வேலைக்கான உத்தரவு வழங்கப்பட்டது. தி.மு.க., நிர்வாகிகள் எத்திராஜ், கலியன், நெடுஞ்செழியன், பாலு, அப்துல்கபூர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

