ADDED : டிச 09, 2025 07:11 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க., ஜெ.,பேரவை சார்பில் கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் சாதனைகளை விளக்கி துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
அண்ணா நகரில் நடந்த நிகழ்ச்சிக்கு ஜெ.,பேரவைச் செயலாளர் ஞானவேல் தலைமை தாங்கினார். நகர செயலாளர் பாபு, ஒன்றிய செயலாளர்கள் ராஜசேகர், தேவேந்திரன் முன்னிலை வகித்தனர். நகர பேரவை செயலாளர் குட்டி வரவேற்றார்.
நிகழ்ச்சியில் செந்தில்குமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் அழகுவேல்பாபு, பிரபு, முன்னாள் எம்.பி., காமராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பொதுமக்களிடம் கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் சாதனைகள் குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கி திண்ணை பிரசாரம் செய்தனர்.
மாவட்ட அவைத் தலைவர் பச்சயைாப்பிள்ளை, பிற அணி செயலாளர்கள் சீனிவாசன், தங்கபாண்டியன், வினோத், ராஜிவ்காந்தி, அய்யாக்கண்ணு, பேரவை துணைச் செயலாளர் ராஜேந்திரன், முன்னாள் சேர்மன் ரங்கன்.
வழக்கறிஞர் பிரிவு பொருளாளர் வெற்றிவேல், நகர நிர்வாகிகள் முருகன், சத்யாகுட்டி, விமலா அர்ஜூனன், சங்கீதா ஜெயராமன் உட்பட பலர் பங்கேற்றனர்.
பேரவை இணை செயலாளர் வேணுகோபால் நன்றி கூறினார்.

