ADDED : ஜன 12, 2026 07:04 AM

திருக்கோவிலுார்: கள்ளக்குறிச்சி மாவட்ட ஜெ., பேரவை சார்பில், முகையூர் மத்திய ஒன்றியம், ஆற்காடு கிராமத்தில் திண்ணை பிரச்சாரம் நடந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க., ஜெ., பேரவை சார்பில், முகையூர் மத்திய ஒன்றியம், ஆற்காடு கிராமத்தில் திண்ணைப் பிரச்சாரம் மற்றும் கடந்த கால அ.தி.மு.க., அரசின் சாதனைகளை விளக்கும் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் ஞானவேல் தலைமை தாங்கி, பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார். முகையூர் மத்திய ஒன்றிய ஜெ., பேரவை செயலாளர் ரஞ்சித்குமார் வரவேற்றார். ஒன்றிய செயலாளர்கள் இளங்கோவன், பழனிச்சாமி, தனபால்ராஜ், மாநில எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி துணை செயலாளர் விநாயகமூர்த்தி, திருக்கோவிலுார் நகர செயலாளர் சுப்பு, அரகண்டநல்லுார் நகர செயலாளர் ராஜ்குமார் முன்னிலை வகித்தனர்.
பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி, கடந்த கால அ.தி.மு.க., அரசின் சாதனைகள் குறித்து விளக்கினர். மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சீனிவாசன், மாவட்ட ஜெ., பேரவை இணை செயலாளர் ஏழுமலை, துணை செயலாளர்கள் ஜெய்சங்கர், குரு, மாவட்ட மாணவர் அணி தலைவர் பார்த்திபன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். மாவட்ட ஜெ., பேரவை இணை செயலாளர் சுபாஷ் நன்றி கூறினார்.
