/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் வேலை நிறுத்தப் போராட்டம்
/
ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் வேலை நிறுத்தப் போராட்டம்
ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் வேலை நிறுத்தப் போராட்டம்
ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் வேலை நிறுத்தப் போராட்டம்
ADDED : ஜூலை 10, 2025 09:00 PM

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில், ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டம் நடந்தது.
கலெக்டர் அலுவலகம் முன் நடந்த போராட்டத்திற்கு, தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் அனந்தகிருஷ்ணன், தமிழ்நாடு இடைநிலை மற்றும் பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர் மன்ற மாநில அமைப்பு செயலாளர் அண்ணாதுரை, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஆனந்தகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.
போராட்டத்தில், அங்கன்வாடி, சத்துணவு, ஆஷா ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து, பணிக்கொடை வழங்க வேண்டும். 6வது ஊதியக்குழுவை விரைவில் அமல்படுத்த வேண்டும். காப்பீட்டு துறையை தனியார் மயமாக்குதலைத் தவிர்க்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணை பொதுச் செயலாளர் மகாலிங்கம், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணைத்தலைவர் ரஹீம் உட்பட பலர் பங்கேற்றனர்.