/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கல்வராயன் மலையில் வெல்லம் பறிமுதல்
/
கல்வராயன் மலையில் வெல்லம் பறிமுதல்
ADDED : மார் 17, 2025 08:46 AM
கச்சிராயபாளையம் : கல்வராயன் மலையில் 4,700 கிலோ சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்படும் வெல்லத்தை போலீசார் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர்.
மாவட்ட எஸ்.பி., ரஜத்சதுர்வேதி தலைமையிலான போலீசார் நேற்று கல்வராயன் மலையில் உள்ள சின்னதிருப்பதி, வாரம், உப்பூர், கொடமாத்தி உள்ளிட்ட பகுதிகளில் சாராய ரெய்டு சென்றனர்.
அப்போது வாரம், சின்னவலவு கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி, 55; என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் தலா 50 கிலோ எடை கொண்ட 64 சாக்கு பைகளில் 3200 கிலோ சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்படும் வெல்லம் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. வெல்லத்தை பறிமுதல் செய்த போலீசார் ராமசாமியை கைது செய்து சிறைக்கு அனுப்பினர்.
கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை மகன் அருள், 28; என்பவருக்கு சொந்தமான வைக்கோல் போரில் 30 சாக்கு பைகளில் 1500 கிலோ நாட்டு வெல்லம் சாராயம் காய்ச்சுவதற்காக மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து நாட்டு வெல்லத்தை பறிமுதல் செய்த கரியாலூர் போலீசார் இது குறித்து வழக்கு பதிந்து அங்கிருந்து தப்பி ஓடிய அருளை தேடி வருகின்றனர்