ADDED : அக் 19, 2025 11:54 PM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மற்றும் திருக்கோவிலுாரில் ஜாக்டோ ஜியோ சார்பில் கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
வட்டார ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். குமாரதேவன் முன்னிலை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ரவி, ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணைத்தலைவர்கள் ரஹீம், சுதா, அரசு ஊழியர் சங்க வட்ட தலைவர் அன்பழகன், பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் அண்ணாதுரை, பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர் சங்கம் மாவட்ட தலைவர் ஆனந்த கிருஷ்ணன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலி பணியிடங்களை நிரப்புதல், கருணை அடிப்படை பணி நியமன உச்ச வரம்பினை 25 சதவீதமாக உயர்த்துதல் உட்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது. தமிழக ஆசிரியர் கூட்டணி நிர்வாகி சத்தியமூர்த்தி நன்றி கூறினார்.
திருக்கோவிலுார் திருக்கோவிலுார் தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்திற்கு, ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டாரத் தலைவர் ரவி தலைமை தாங்கினார். வட்டார செயலாளர் வெங்கடேஷ் வரவேற்றார். அரசு ஊழியர் சங்க வட்டார தலைவர் மூர்த்தி, பட்டதாரி ஆசிரியர் கூட்டணி வட்டார தலைவர் செல்வகுமார், செயலாளர் முனியன் முன்னிலை வகித்தனர்.
ஜாக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் இளஞ்செழியன், உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தணிக்கையாளர் வில்வபதி, அரசு ஊழியர் சங்க மாவட்ட துணை தலைவர் அன்பழகன் உள்ளிட்டோர் கோரிக்கை வலியுறுத்தி பேசினர்.