/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வரும்12ம் தேதி ஜமாபந்தி துவக்கம்
/
வரும்12ம் தேதி ஜமாபந்தி துவக்கம்
ADDED : மே 01, 2025 06:12 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி தாலுகாவில் வரும், 12ம் தேதியில் இருந்து 21 வரை வருவாய் தீர்வாயம் எனும் ஜமாபந்தி நடக்கிறது.
கள்ளக்குறிச்சி தாலுகாவில், 4 குறுவட்டங்களுக்குட்பட்ட, 93 வருவாய் கிராமங்கள் உள்ளன. இந்த குறுவட்டங்களில் டி.ஆர்.ஓ., ஜீவா தலைமையில் நடைபெறும் ஜமாபந்தியில் கிராம கணக்குகள் சரிபார்க்கப்பட உள்ளன.
இதில் இந்திலி குறுவட்டத்திற்கு வரும், 12, 13 தேதியிலும், தியாகதுருகம் குறுவட்டத்தில் வரும், 14, 15 தேதியிலும், நாகலுார் குறுவட்டத்தில் வரும், 16, 19 மற்றும் 20 தேதியிலும், கள்ளக்குறிச்சி குறுவட்டத்தில் வரும், 21ம் தேதியும் ஜமாபந்தி முகாம் நடைபெறுகிறது.
பொதுமக்கள் தங்களது குறுவட்டத்தில் நடைபெறும் ஜமாபந்தி முகாமில் பங்கேற்று, பட்டா மாற்றம், வீட்டு மனை பட்டா, குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை, நலவாரிய அட்டை, மருத்துவகாப்பீடு அட்டை, பிறப்பு மற்றும் இறப்பு சான்று மற்றும் பொதுநல மனுக்களை அளித்து பயன்பெறலாம்.

