/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஜன்சுரக் ஷா சமூக பாதுகாப்பு திட்ட முகாம்
/
ஜன்சுரக் ஷா சமூக பாதுகாப்பு திட்ட முகாம்
ADDED : ஆக 20, 2025 10:47 PM
கள்ளக்குறிச்சி, ;ஜன்சுரக் ஷா சமூக பாதுகாப்பு திட்டங்கள் தொடர்பான முகாமினை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு;
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஜன்சுரக் ஷா சமூக பாதுகாப்பு திட்டங்கள் தொடர்பான முகாம் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வங்கிகள் மூலம் வரும் செப்., 30ம் தேதி வரை நடைபெறுகிறது. முகாமில் பொதுமக்கள் பங்கேற்று அரசின் சமூக பாதுகாப்பு திட்டங்களில் இணைந்து பயன்பெறலாம்.
விபத்து காப்பீட்டுத் திட்டம் கீழ் (பி.எம்., சுரக் ஷா பீமா யோஜனா) சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் 18 முதல் 70 வயது வரை உள்ளவர்களுக்கு விபத்து காப்பீடு ரூ. 2 லட்சம் வரை, ஆண்டுக்கு ரூ. 20 மட்டும் செலுத்த வேண்டும். ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் (பி.எம்., ஜீவன் ஜோதி பீமா யோஜனா) சேமிப்பு கணக்கு தை்திருக்கும் 18 முதல் 50 வயது வரை உள்ளவர்களுக்கு ஆயுள் காப்பீடு ரூ. 2 லட்சம் வரை, ஆண்டுக்கு ரூ.436 மட்டும் செலுத்த வேண்டும்.
ஓய்வூதிய திட்டத்தின் கீழ் (அடல் பென்ஷன் யோஜனா) வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா வங்கி கணக்கு தொடங்கப்படும். மேலும் ஏற்கனவே வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள், தங்களது கணக்கில் தற்போதைய விவரங்களை (ஆதார் மற்றும் வருமான வரி எண்) வங்கிக்கு சமர்ப்பித்து புதுப்பித்து கொள்ளவும்.
இந்த சேவைகளை உங்கள் பகுதிகளில் நடக்கும் முகாம்களில் பெற்றுக் கொள்ளலாம். தங்களது பகுதியில் உள்ள வங்கி வணிக தொடர்பாளர்கள் மூலமாகவும், வங்கி கிளைக்கு சென்றும் பெறலாம். மேலும் தங்களது வங்கியின் ஏ.டி.எம்., மிஷின், வங்கியின் மொபைல் செயலி, ஆன்லைன் மூலமாகவும் புதுப்பித்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.