/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஆசிரியர் வீட்டில் நகை, பணம் திருட்டு
/
ஆசிரியர் வீட்டில் நகை, பணம் திருட்டு
ADDED : ஆக 13, 2025 12:18 AM
தியாகதுருகம்,: தியாகதுருகத்தில் ஆசிரியர் வீட்டில் 4 சவரன் நகை 74 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
தியாகதுருகம் துணை மின் நிலையம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 44; ஆசிரியர். இவர் சித்தேரிப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் பணிபுரிந்து வருகிறார். தனது மகள் படிப்பிற்காக மாடூர் டோல்கேட் அருகே வாடகைக்கு வீடு எடுத்து குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை துணை மின் நிலையம் எதிரில் உள்ள தனது வீட்டிற்கு வெங்கடேசன் சென்றார்.
அப்போது கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ திறந்து கிடந்தது. அதிலிருந்த 4 சவரன் நகை, ரூ 74 ஆயிரம் பணம் திருடு போனது தெரிய வந்தது.
இது குறித்து தியாகதுருகம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்த போலீசார் நகை, பணம் திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.