/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஆர்ப்பாட்டம்
/
தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஆர்ப்பாட்டம்
தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஆர்ப்பாட்டம்
தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 12, 2024 04:19 AM

திருக்கோவிலுார்: தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் திருக்கோவிலுாரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பை பறிக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும். டிட்டோஜாக் அமைப்புடன் நடந்த பேச்சு வார்த்தையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 12 கோரிக்கைகளை நிறைவேற்றிட ஆணைகள் வெளியிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று கள்ளக்குறிச்சி வட்டார கல்வி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
வட்டாரத் தலைவர் ரவி தலைமை தாங்கினார். பிரேம்குமார் முன்னிலை வகித்தார். வட்டார செயலாளர் சதீஷ் வரவேற்றார்.
மாவட்ட செயலாளர் ரமேஷ், நிர்வாகிகள் புஷ்பராஜ், இளஞ்செழியன், செல்வம், அசோக்குமார், முருகன், திருமலை, பாக்கியநாதன், சாந்தி உள்ளிட்ட கூட்டு நடவடிக்கை குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். வட்டார பொருளாளர் லட்சுமி நாராயணன் நன்றி கூறினார்.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி வட்டாரக் கல்வி அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். வட்ட செயலாளர்கள் குமார், கண்ணையன், சீனுவாசன் முன்னிலை வகித்தனர். மாவட்ட நிர்வாகிகள் சத்தியமூர்த்தி, எழிலரசன், தங்க மனோகர், ஏழுமலை, கலாநிதி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாவட்ட துணைத் தலைவர் ரஹீம் சிறப்புரையாற்றினர்.