தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ ஜே.எஸ்., ஆஸ்டியூட் பயிற்சி வகுப்பு துவக்க விழா

 ஜே.எஸ்., ஆஸ்டியூட் பயிற்சி வகுப்பு துவக்க விழா

 ஜே.எஸ்., ஆஸ்டியூட் பயிற்சி வகுப்பு துவக்க விழா


ADDED : ஜூலை 06, 2026 03:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 06, 2026 03:50 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஜே.எஸ்., குளோபல் அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளியில் 'ஜே.எஸ்., ஆஸ்டியூட்' பயிற்சி வகுப்பு துவக்க விழா நடந்தது.

கள்ளக்குறிச்சி ஜே.எஸ்., பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, பள்ளி முதல்வர் ஜெயலட்சுமி தலைமை தாங்கினார். துணை முதல்வர் பாபு முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை உதவி பேராசிரியர் சண்முகபிரியா பேசுகையில், 'தற்போதைய சூழலில் அனைத்து துறைகளிலும் போட்டி அதிகமாக உள்ளது. பள்ளியில் நடத்தப்படும் பாடங்களை நன்றாக உள்வாங்கி படித்தால் மட்டுமே மத்திய அரசு சார்பில் நடத்தப்படும் நுழைவுத்தேர்வுகளில் எளிதில் வெற்றி பெற்று உயர் படிப்புகளில் சேர முடியும். சமூக வலைதளங்களில் நேரத்தை செலவிடுவதை தவிர்க்க வேண்டும்' என்றார்.

' ஜே.எஸ்., ஆஸ்டியூட்' இயக்குநர் மதுமிதன்வா வீடியோ கான்பிரன்ஸ் மூலம் மாணவர்களிடம் பேசினார்.

தொடர்ந்து, பள்ளி முதல்வர் ஜெயலட்சுமி பேசுகையில், '8 முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களுக்கு சனிக்கிழமை தோறும் நீட், ஐ.ஐ.டி., - ஜே.இ.இ., - சி.யூ.இ.டி., மற்றும் பவுண்டேஷன் வகுப்புகள் நடத்தப்படுகிறது.

இதற்காக சென்னை, சேலம், கோயம்புத்துார் பகுதியில் இருந்து அனுபவமிக்க ஆசிரியர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். பாடத்தை மனப்பாடம் செய்யாமல், அவற்றின் அடிப்படை தத்துவங்களைச் சுலபமாக புரிந்துகொள்ள இந்த பயிற்சி வகுப்பு உ தவியாக இருக்கும்' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us