/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கிளைச்சிறையில் நீதிபதிகள் ஆய்வு
/
கிளைச்சிறையில் நீதிபதிகள் ஆய்வு
ADDED : மார் 29, 2025 05:08 AM

கள்ளக்குறிச்சி: கிளைச்சிறையில், பொருளாதாரத்தில் பின் தங்கிய குற்றவாளிகளுக்கு ஜாமீன் ஏற்பாடு செய்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையம் அருகே உள்ள கிளைச்சிறையில் மாவட்ட முதன்மை நீதிபதி பூங்குழலி, முதன்மை குற்றவியல் நீதித்துறை நடுவர் ஸ்ரீராம் ஆகியோர் நேற்று மாதாந்திர ஆய்வு மேற்கொண்டனர். இதில், சிறையில் உள்ள கைதிகளுக்கு வழங்கப்படும் உணவு, தங்குமிடம், சுகாதாரம் ஆகியவை குறித்து ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து, சிறையில் உள்ள 16 நபர்களிடம், 'என்ன குற்றங்களை செய்தீர்கள்' என, நீதிபதிகள் கேட்டறிந்தனர். மேலும், ஜாமீன் கிடைக்க மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், சிறையில் இருந்து வெளியே சென்றால் மீண்டும் குற்றம் செய்யாமல் ஒழுக்கமாக இருக்க வேண்டும், கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.
பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள குற்றவாளிகளுக்கு அரசு வக்கீல் மூலம் ஜாமீன் ஏற்பாடு செய்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர். அப்போது, சிறை மேற்பார்வையாளர் மாரியப்பன் உட்பட பலர் உடனிருந்தனர்.