/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பெண்ணுரிமை குறித்து நீதித்துறை விழிப்புணர்வு கருத்தரங்கம்
/
பெண்ணுரிமை குறித்து நீதித்துறை விழிப்புணர்வு கருத்தரங்கம்
பெண்ணுரிமை குறித்து நீதித்துறை விழிப்புணர்வு கருத்தரங்கம்
பெண்ணுரிமை குறித்து நீதித்துறை விழிப்புணர்வு கருத்தரங்கம்
ADDED : ஜூலை 01, 2025 01:48 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட நீதித்துறை சார்பில் மகளிர் பெண்ணுரிமை, சமத்துவம், பாலியல் வன்கொடுமை குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி டாக்டர் ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் நடந்த கருத்தரங்கிற்கு, மாவட்ட முதன்மை நீதிபதி இருசன் பூங்குழலி தலைமை தாங்கினார். கலெக்டர் பிரசாந்த், கல்வி நிறுவனங்களின் சேர்மன் மகுடமுடி முன்னிலை வகித்தனர். கூடுதல் மாவட்ட நீதிபதி சையது பர்கதுல்லா வரவேற்றார்.
சேலம் மனநல மருத்துவர் லட்சுமி துரை, கள்ளக்குறிச்சி அரசு கல்லுாரி உதவி பேராசிரியர் வீரலட்சுமி, முதுநிலை வழக்கறிஞர் ஆதிலட்சுமி லோகமூர்த்தி, சமூக நல அலுவலர் தீபிகா ஆகியோர் வெவ்வேறு தலைப்புகளில் பெண்ணுரிமை, சமத்துவம், பாலியல் வன்கொடுமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர்.
கருத்தரங்கில் நீதிமன்ற அலுவலர்கள், வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் பங்கேற்றனர்.
முதன்மை குற்றவியல் நீதிபதி ஜெயவேல் நன்றி கூறினார்.