/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
நீதித்துறை பணி நிறைவுற்றோர் சங்க பொதுக்குழு கூட்டம்
/
நீதித்துறை பணி நிறைவுற்றோர் சங்க பொதுக்குழு கூட்டம்
நீதித்துறை பணி நிறைவுற்றோர் சங்க பொதுக்குழு கூட்டம்
நீதித்துறை பணி நிறைவுற்றோர் சங்க பொதுக்குழு கூட்டம்
ADDED : செப் 09, 2025 07:21 AM

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்ட தமிழ்நாடு நீதித்துறை பணி நிறைவுற்றோர் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது.
கள்ளக்குறிச்சியில் தனியார் மீட்டிங் ஹாலில் நடந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சிவசூரியன் தலைமை தாங்கினார். துணை தலைவர் சுப்புராயலு, செயலாளர் தாமோதரன் , பொருளாளர் நேரு முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மூத்த சங்க உறுப்பினர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. கூட்டத்தில் சங்க அறிக்கை, வரவு செலவு அறிக்கை, அடிப்படை விதிகள் திருத்தம் தொடர்பாக எடுத்துரைக்கப்பட்டன. இதில் சங்க நிர்வாகிகள் துரைராஜ், குருசாமி, வைத்தியநாதன், பழனிசாமி, சின்னதுரை, கரிகாலன், ரங்கநாதன், இப்ராஹிம், யைத்பாஷீத் உட்பட பலர் பங்கேற்றனர்.