/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கல்லை தமிழ் சங்க குறிஞ்சி சாரல் விழா
/
கல்லை தமிழ் சங்க குறிஞ்சி சாரல் விழா
ADDED : செப் 22, 2025 11:32 PM

கள்ளக்குறிச்சி, ; கள்ளக்குறிச்சி கல்லை தமிழ் சங்கத்தின் குறிஞ்சி சாரல் விழா நடந்தது.
விழாவிற்கு கல்லை தமிழ் சங்க காப்பாளர் டாக்டர் உதயகுமார் தலைமை தாங்கினார். சிறப்பு தலைவர் கோமுகி மணியன் துவக்கி வைத்தார். கோவல் தமிழ் சங்க தலைவர் சிங்கார உதியன், மணலுார்பேட்டை தமிழ் சங்க தலைவர் சம்பத், தமிழ் வழிக்கல்வி இயக்க தலைவர் சின்னப்பத்தமிழர், சேலம் எழுத்துக்களம் தலைவர் கவிஞர் சூர்யநிலா முன்னிலை வகித்தனர்.
கல்லை தமிழ் சங்க தலைவர் புகழேந்தி வரவேற்றார். பேராசிரியர் காஞ்சி கதிரவன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று சங்க இலக்கியங்களில் குறிஞ்சி என்ற தலைப்பில் பேசினார். ஓய்வு பெற்ற மாவட்ட வன அலுவலர் கொளஞ்சியப்பா, சங்கை தமிழ் சங்க தலைவர் சுப்பராயன், சங்கராபுரம் ஓய்வுபெற்றோர் சங்க தலைவர் செல்வராசன், கபடிக்குழு தலைவர் விஜயகுமார், நல்லாசிரியர் சாதிக்பாஷா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
டாக்டர் செழியன் எழுதிய கிழக்கு தொடர்ச்சி மலை காராள வம்சம்-வரலாறு எனும் புத்தகத்தை சங்கராபுரம் திருக்குறள் பேரவை செயலாளர் இலக்குமிபதி அறிமுகப்படுத்தி ஆய்வுரை வழங்கினார். பகுத்தறிவு இலக்கிய மன்ற தலைவர் ஜெயராமன் தலைமையில் நடந்த கவியரங்கத்தில் கவிஞர்கள் முத்தமிழ்முத்தன், சாந்தகுமார், ஆனந்தி, முருகன், நடேசமணி ஆகியோர் கவிதைகள் வழங்கினர்.
தலைமை ஆசிரியர் அறிவழகன், ஏ.கே.டி., கல்வியியல் கல்லுாரி முதல்வர் பர்வத அரசி, கவிஞர்கள் அருள்ஞானம், மகேந்திரன் கவியரங்கத்தில் பங்கேற்றனர். கல்லை தமிழ் சங்க இணை செயலாளர் ராமானுஜம் ஒருங்கிணைத்தார். செயலாளர் மதிவாணன் நன்றி கூறினார்.