/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மலேசிய தமிழ் எழுத்தாளர்களுக்கு கல்லைத் தமிழ்ச்சங்கம் பாராட்டு
/
மலேசிய தமிழ் எழுத்தாளர்களுக்கு கல்லைத் தமிழ்ச்சங்கம் பாராட்டு
மலேசிய தமிழ் எழுத்தாளர்களுக்கு கல்லைத் தமிழ்ச்சங்கம் பாராட்டு
மலேசிய தமிழ் எழுத்தாளர்களுக்கு கல்லைத் தமிழ்ச்சங்கம் பாராட்டு
ADDED : ஜன 16, 2024 06:30 AM

கள்ளக்குறிச்சி : மலேசிய நாட்டு தமிழ் எழுத்தாளர்களுக்கு கல்லைத் தமிழ்ச் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடந்தது.
சென்னை, நந்தம்பாக்கத்தில் நடந்த விழாவிற்கு, கோவை முத்தமிழ் அரங்கத்தின் தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். மும்பை தமிழ் மெமோரியா திங்கள் இதழ் ஆசிரியர் குமணராசா, இந்திய பேனா நண்பர் பேரவைத் தலைவர் திருமாகருண் புவனேஸ்வர், தமிழ்ச் சங்கத் தலைவர் சேலைசாமி முன்னிலை வகித்தனர்.
அயலக தமிழர் தின விழாவை முன்னிட்டு தமிழகத்திற்கு வந்த மலேசிய நாட்டு தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் மதிவாணன், மலேசிய எழுத்தாளர் முத்து பாண்டியன் ஆகியோர் தமிழ்க்கவியுரை வழங்கினர்.
முன்னதாக கல்லைத் தமிழ்ச் சங்க செயலாளர் மதிவாணன் கல்லைத் தமிழ்ச் சங்கத்தின் 60ம் ஆண்டு மலரை மலேசிய தமிழர்களிடம் வழங்கி, பொன்னாடை அணிவித்து பாராட்டினார்.
புதுச்சேரி தமிச்சங்கத் தலைவர் முத்து, உலகத் தமிழ்ப் பாராளுமன்ற பொதுச் செயலாளர் புனித தேவகுமார் உள்ளிட்ட தமிழ்ச் சான்றோர்கள் பங்கேற்றனர். கல்லைத் தமிழ்ச் சங்கச் செயற்குழு உறுப்பினர் தொல்காப்பியன் நன்றி கூறினார்.