/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சி - திருவண்ணாமலை சாலை பணி தீவிரம்! ரூ.176 கோடி மதிப்பில் 4 வழிச்சாலையாக மாற்றம்
/
கள்ளக்குறிச்சி - திருவண்ணாமலை சாலை பணி தீவிரம்! ரூ.176 கோடி மதிப்பில் 4 வழிச்சாலையாக மாற்றம்
கள்ளக்குறிச்சி - திருவண்ணாமலை சாலை பணி தீவிரம்! ரூ.176 கோடி மதிப்பில் 4 வழிச்சாலையாக மாற்றம்
கள்ளக்குறிச்சி - திருவண்ணாமலை சாலை பணி தீவிரம்! ரூ.176 கோடி மதிப்பில் 4 வழிச்சாலையாக மாற்றம்
ADDED : நவ 24, 2024 11:22 PM

கள்ளக்குறிச்சி நகரை திருவண்ணாமலையுடன் இணைக்கும் முக்கிய சாலையாக சங்கராபுரம், மூங்கில்துறைப்பட்டு வழித்தடம் உள்ளது. இச்சாலை வழியாக நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகிறது. இதனால் இச்சாலை வழியாக அரசு, தனியார் பஸ்கள் மட்டுமின்றி, அதிகளவிலான கரும்பு வாகனங்கள் உள்ளிட்ட கனரக வாகனங்களும் அதிகளவில் சென்று வருகிறது.
இந்த வழியில், அதிக ஊர்கள் உள்ளதாலும் பல இடங்களில் சாலைகள் அபாயகரமான வளைவுகளுடன் வேகத்தடைகள் அதிகம் இருப்பதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். மொத்தம் 65 கி.மீ., நீளமுள்ள இந்த வழித்தடத்தில், செல்லும் பஸ்கள் கள்ளக்குறிச்சியில் இருந்து திருவண்ணாமலை செல்ல 2 மணி நேரம் வரை ஆகிறது.
குறிப்பாக மாதந்தோறும் திருவண்ணாமலை நடக்கும் கிரிவலத்தின் போது, வழக்கத்தை விட வாகன போக்குவரத்து மிகுதியாக காணப்படும். அதேபோல் குறுகிய இடங்களில் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் ஏதேனும் பழுது காரணமாக நிற்கும் பட்சத்தில், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
இருவழிச்சாலையால் இரவு நேரங்களில் ஆங்காங்கே பல இடங்களில் அடிக்கடி பெரும் விபத்துகள் ஏற்பட்டு வந்தது. இரவு நேரங்களில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே செல்லும் நிலை இருந்தது. வாகனங்கள் பழுது மற்றும் விபத்து நேரங்களில் வாகன நெரிசல் ஏற்படும் பட்சத்தில், அதனை கட்டுப்படுத்த போலீசார் கடும் சிரமங்களை சந்திக்கின்றனர்.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி - திருவண்ணாமலை சாலையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளை தடுக்கும் பொருட்டு நெடுஞ்சாலை துறையினர் மூலம் இருவழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
தொடர்ந்து முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நான்கு வழிச்சாலையைாக மாற்றும் பணிகளுக்கு 176 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதனையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணிகளை கள்ளக்குறிச்சியில் அமைச்சர் வேலு துவக்கி வைத்தார்.
தொடர்ந்து, சாலையில் ஆற்றின் குறுக்கே செல்லும் கோமுகி ஆறு உள்ளிட்ட பகுதியில் உயர்மட்ட பாலம், பல இடங்களில் சிறுபாலங்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து தற்போது தார்சாலை அமைத்து நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இச்சாலை பணிகள் முடிந்து, பயன்பாட்டிற்கு வரும்பட்சத்தில் வாகன ஓட்டிகள் சிரமம் இன்றி செல்வதற்கான வழிவகைகள் ஏற்படும்.