/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளியில் வென்று காட்டுவோம் நிகழ்ச்சி
/
கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளியில் வென்று காட்டுவோம் நிகழ்ச்சி
கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளியில் வென்று காட்டுவோம் நிகழ்ச்சி
கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளியில் வென்று காட்டுவோம் நிகழ்ச்சி
ADDED : டிச 07, 2024 07:45 AM

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளியில் அரசு பொதுத் தேர்வுகளை எதிர்நோக்கும் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு தன்னம்பிக்கையை வளர்த்தெடுத்து, இலக்குகளை நோக்கி உறுதியுடன் பயணிக்கும் வகையில் 'வென்று காட்டவோம் ஊக்குவிப்பு' நிகழ்ச்சி நடந்தது.
பள்ளி மைதானத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். பள்ளியின் நீட் இயக்குனர் அஞ்சப்பெல்லி சரவணகுமார், பள்ளியின் ராணுவ சேர்ப்பு பயிற்சி இயக்குனர் ஜெயமுருகன் முன்னிலை வகித்தனர். தமிழாசிரியர் சதிஷ் வரவேற்றார். ஏ.கே.டி., பெண்கள் பள்ளி முதல்வர் ஏஞ்சலின் திருமறைச்செல்வி, சி.பி.எஸ்.இ., பள்ளி முதல்வர் நான்சிமாதுளா அறிமுக உரையாற்றினார். கரூர் வி.எஸ்.பி கல்லுாரியின் நிர்வாக தலைவர் ரகுபதி சிறப்புரையாற்றினார்.
தனியார் டிவி தொகுப்பாளர் ஈரோடு மகேஷ், கல்வியின் முக்கியத்துவதை உணர்ந்து செயல்பட வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுறுத்தி பேசினார். நிகழ்ச்சியில், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். ஏ.கே.டி., மெட்ரிக் பள்ளி முதல்வர் வெங்கட்ரமணன் நன்றி கூறினார்.