ADDED : செப் 12, 2026 05:11 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் ஒருங்கிணைந்த தி.மு.க., சார்பில், சட்டசபையில் முதல்வர் விஜயின் பேச்சை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட செயலாளர் உதயசூரியன், மலையரசன் எம்.பி., முன்னிலை வகித்தனர். நகர மன்ற தலைவர் சுப்ராயலு வரவேற்றார்.
முன்னாள் எம்.எல்.ஏ., அங்கையற்கண்ணி, மாவட்ட சேர்மன் புவனேஸ்வரி பெருமாள், மாவட்ட அவைத்தலைவர் ராமமூர்த்தி, துணைச் செயலாளர்கள் ஆறுமுகம், அண்ணாதுரை, காமராஜ், பொதுக்குழு உறுப்பினர்கள் மணிமாறன், ராஜி, உளுந்துார்பேட்டை நகர மன்ற தலைவர் திருநாவுக்கரசு, கள்ளக்குறிச்சி நகர மன்ற துணைத் தலைவர் ஷமீம்பானு அபுபக்கர், நகரமன்ற கவுன்சிலர் பாபு.
ஒன்றிய செயலாளர்கள் சத்தியமூர்த்தி, அன்புமணிமாறன், நெடுஞ்செழியன், அண்ணாதுரை, பெருமாள், பாரதிதாசன், துரைமுருகன், அய்யனார், கிருஷ்ணமூர்த்தி, ராஜேந்திரன், வைத்தியநாதன், ராஜவேல், முருகன், அசோக்குமார்.
ஒன்றிய சேர்மன்கள் வடிவுக்கரசி சாமி சுப்ரமணியன், தாமோதரன், பேரூராட்சி சேர்மன்கள் மணலுார்பேட்டை ஜெய்கணேஷ், தியாகதுருகம் வீராசாமி, துணைச் சேர்மன் சங்கர், இளைஞரணி நிர்வாகிகள் அருள், உதயா, ஜெய்சங்கர், சக்திவேல் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் சட்டசபையில் முதல்வர் விஜய் ஆணவமாக பேசியதையும், பொய்களை மட்டும் பரப்புவதாகவும், ஜனநாயக மாண்புகளை குலைப்பதாகவும் பேசினர்.
