/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சி நகர பா.ஜ., கிளை தலைவர்கள் தேர்தல்
/
கள்ளக்குறிச்சி நகர பா.ஜ., கிளை தலைவர்கள் தேர்தல்
ADDED : டிச 13, 2024 06:59 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி நகர பா.ஜ.,வில் கிளை தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பா.ஜ.,வின் கிளை தலைவர்கள் தேர்தல் நடந்து வருகிறது. கள்ளக்குறிச்சி நகரம் 1-வது வார்டு, பூத் எண் 47-ல் பா.ஜ.,வின் கிளை தேர்தல் நேற்று துவங்கியது.
மாநில செயற்குழு உறுப்பினர் பாலசுந்தரம் தலைமை தாங்கினார். ராணுவ பிரிவு மாவட்டத் தலைவர் கேப்டன் துரைசாமி, முன்னாள் சிந்தனையாளர் பிரிவு மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி முன்னிலை வகித்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட தேர்தல் இணை அதிகாரியான சிறுபான்மை அணி மாநில பொருளாளர் ஸ்ரீசந்த் தேர்தல் நடத்தி, கிளைத்தலைவர்களை தேர்வு செய்தார்.
முன்னாள் கிளைத் தலைவர் சத்யா முன்மொழிவுடன், அனைத்து நிர்வாகிகளின் ஆதரவுடன் போட்டியின்றி பூத் 47-க்கான கிளை தலைவராக சின்னப்பொண்ணு ரவி தேர்வு செய்யப்பட்டார்.
முன்னாள் மாவட்ட செயலாளர் நதியா, கிளை நிர்வாகிகள் மாரியாப்பிள்ளை, முருகேசன், பாப்பாத்தி, ராஜசேகர், சாமிதுரை, சந்தியா, பாரதி, சாந்தி, குமாரி பிரவீன்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.