sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கள்ளக்குறிச்சி தொகுதி அ.தி.மு.க.,வினர்... உற்சாகம்; தி.மு.க.,வுடன் நேரடி போட்டி உறுதி

/

கள்ளக்குறிச்சி தொகுதி அ.தி.மு.க.,வினர்... உற்சாகம்; தி.மு.க.,வுடன் நேரடி போட்டி உறுதி

கள்ளக்குறிச்சி தொகுதி அ.தி.மு.க.,வினர்... உற்சாகம்; தி.மு.க.,வுடன் நேரடி போட்டி உறுதி

கள்ளக்குறிச்சி தொகுதி அ.தி.மு.க.,வினர்... உற்சாகம்; தி.மு.க.,வுடன் நேரடி போட்டி உறுதி


ADDED : மார் 21, 2024 12:28 AM

Google News

ADDED : மார் 21, 2024 12:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில் இரண்டாவது முறையாக தி.மு.க.,- அ.தி.மு.க., இடையே நேரடி போட்டி ஏற்படுவது உறுதியாகியுள்ளது.

கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில் நான்கு தொகுதிகள் அ.தி.மு.க., வசமும், இரண்டு தொகுதிகள் தி.மு.க., வசமும் உள்ளது. இதுவரை நடந்த மூன்று லோக்சபா தேர்தலில் இரண்டு முறை தி.மு.க.,வும், ஒரு முறை அ.தி.மு.க.,வும் வெற்றி பெற்றுள்ளது.

லோக்சபா தேர்தலில் தி.மு.க.,வில் போட்டியிட பலர் முனைப்பு காட்டினர். அ.தி.மு.க.,வில் 'ப' பலம் மற்றும் கூட்டணி பலம் இல்லாததால் விருப்ப மனு அளித்த பலர் தேர்தலில் போட்டியிட தயக்கம் காட்டினர். இதனால், அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் குமரகுரு, கூட்டணி கட்சிக்கு கள்ளக்குறிச்சி தொகுதி ஒதுக்கவில்லையெனில் தானே நிற்கபோவதாக கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் வீரவேசமாக கூறி வந்தார்.

அ.தி.மு.க.,வுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்த தே.மு.தி.க., கள்ளக்குறிச்சி தொகுதியை கேட்டு பெறும் என்றே பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் கள்ளக்குறிச்சியில் கட்சி துவக்கத்திற்கான அடித்தளம், சட்டசபை தேர்தலில் ரிஷிவந்தியம், உளுந்துார்பேட்டையில் தொகுதியில் விஜயகாந்த் போட்டியிட்டது. கடந்த லோக்சபா தேர்தலில் தே.மு.தி.க., சார்பில் பிரேமலதாவின் சகோதரர் சுதிஷ் போட்டியிட்டது என ஒவ்வொரு தேர்தலிலும் தே.மு.தி.க., அரசியல் பிரவேசம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை நோக்கியே இருந்தது.

அ.தி.மு.க., கூட்டணியில் அங்கம் வகிக்கும் தே.மு.தி.க., கள்ளக்குறிச்சி தொகுதியை நிச்சயம் கேட்டு பெறும் என்றே பெரும்பாலோனர் எதிர்பார்த்தனர். அ.தி.மு.க., நேற்று முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அதில் கள்ளக்குறிச்சி தொகுதி இடம் பெறவில்லை. இதனால் தே.மு.தி.க.,விற்கு தான் கள்ளக்குறிச்சி தொகுதி என கருதப்பட்டது.

தொடர்ந்து தி.மு.க., வேட்பாளர் பட்டியலில் கள்ளக்குறிச்சி தொகுதி வேட்பாளராக தியாகதுருகம் நகர செயலாளர் மலையரசன் அறிவிக்கப்பட்டார். தி.மு.க., - தே.மு.தி.க.,வுக்கு தான் போட்டி என்று கட்சியினர் பெரும்பாலோனர் எதிர்பார்த்த நிலையில் 'திடீர் டிவிஸ்டாக அமைந்தது. மாலையில் தே.மு.தி.க.,வுக்கு ஒதுக்கப்பட்ட 5 தொகுதிகள் பட்டியலில் கள்ளக்குறிச்சி தொகுதி இடம்பெறவில்லை.

இதற்கிடையே நேற்று காலை அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் குமரகுரு, கட்சியின் சில முக்கிய நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர்களை தொடர்பு கொண்டு கள்ளக்குறிச்சி தொகுதியில் நான் நிற்கபோவது உறுதி. உங்களது முழு ஒத்துழைப்பு தேவை என்று உருக்கமாக பேசியுள்ளார். இது நிர்வாகிகளிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

ஒருபடி மேலாக, ஓவியரான கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ., செந்தில்குமார், அதிகார பூர்வமாக வேட்பாளராக அறிவிக்காத நிலையில், இரட்டை இலை சின்னத்தை வரைந்து, வெற்றி வேட்பாளர் குமரகுரு என்று குறிப்பிட்டு சுவர் விளம்பரம் தானே எழுதினார்.

அ.தி.மு.க.,வில் கள்ளக்குறிச்சி தொகுதி அதிகார பூர்வமாக இதுவரை அறிவிக்காத நிலையில் வேட்பாளர் குமரகுரு என்று கிராமப்புறங்களில் பெரும்பாலான இடங்களில் சுவர் விளம்பரம் எழுதி வருகின்றனர். தி.மு.க., வேட்பாளராக மலையரசன் அறிவிக்கப்பட்ட பின், அ.தி.மு.க.,வினரின் திடீர் மாற்றம் கட்சியினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியதாக தெரிகிறது. கள்ளக்குறிச்சி தொகுதியில் தி.மு.க., - அ.தி.மு.க., இடையே நேரடி போட்டி ஏற்படுவது தற்போது உறுதியாகியுள்ளது.






      Dinamalar
      Follow us