/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சி தி.மு.க., வேட்பாளர் யார்? நேர்காணலுக்கு சென்றவர்கள் 'திக் திக்'
/
கள்ளக்குறிச்சி தி.மு.க., வேட்பாளர் யார்? நேர்காணலுக்கு சென்றவர்கள் 'திக் திக்'
கள்ளக்குறிச்சி தி.மு.க., வேட்பாளர் யார்? நேர்காணலுக்கு சென்றவர்கள் 'திக் திக்'
கள்ளக்குறிச்சி தி.மு.க., வேட்பாளர் யார்? நேர்காணலுக்கு சென்றவர்கள் 'திக் திக்'
ADDED : மார் 19, 2024 10:43 PM
கள்ளக்குறிச்சி தி.மு.க., வேட்பாளர் வாய்ப்பு யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்போடு நேர்காணலுக்கு சென்ற நிர்வாகிகள் தவிப்புடன் காத்திருக்கின்றனர்.
கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில் தி.மு.க., 4 வது முறையாக நேரடியாக களம் காணுகிறது.கூட்டணியில் உள்ள காங்., மற்றும் வி.சி., கட்சிகள் கள்ளக்குறிச்சி தொகுதியை கேட்டு அழுத்தம் கொடுத்த போதும் தி.மு.க., தலைமை அதை நிராகரித்து தன் வசம் வைத்துக் கொண்டது.
இந்நிலையில் தி.மு.க., போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிட யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் நேர்காணலுக்கு சென்ற நிர்வாகிகள் தவிப்புடன் காத்திருக்கின்றனர்.
கடந்த தேர்தலில் தி.மு.க., வில் யாருக்கு வாய்ப்பு என்பது சில தினங்களுக்கு முன்பே ஓரளவுக்கு தெரிந்து விடும்.
ஆனால் இத்தேர்தலில் கட்சித் தலைமை சில ரகசியங்களை கசிய விடாமல் கடைசி வரை பாதுகாத்து தேர்தல் வியூகங்களை வகுத்து வருகிறது.
அந்த அடிப்படையில் யாருக்கு 'சீட்' வழங்கப்படும் என்பதை உயர்மட்ட நிலையில் உள்ள நிர்வாகிகளால் கூட யூகிக்க முடியாமல் குழப்பத்தில் உள்ளனர்.
இதனால் நேர்காணலுக்கு சென்ற 21 பேரும் உச்சகட்ட டென்ஷனில் தனக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் அறிவிப்பு வெளியாகும் கடைசி நிமிடம் வரை 'திக் திக்' என்று காத்திருக்கின்றனர்.

