/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மைதானம் சீரமைத்து முறையாக பராமரிக்க நடவடிக்கை தேவை
/
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மைதானம் சீரமைத்து முறையாக பராமரிக்க நடவடிக்கை தேவை
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மைதானம் சீரமைத்து முறையாக பராமரிக்க நடவடிக்கை தேவை
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மைதானம் சீரமைத்து முறையாக பராமரிக்க நடவடிக்கை தேவை
ADDED : அக் 09, 2024 11:17 PM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரியில் விளையாட்டு மைதானத்தை சீரமைத்து முறையாக பராமரித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கள்ளக்குறிச்சி அடுத்து சிறுவங்கூரில் அரசு மருத்துவ கல்லுாரியில் மாணவ மாணவிகள் பலர் படித்து வருகின்றனர். கல்லுாரியில் படிக்கும் மாணவ மாணவிகள் மற்றும் பேராசிரியர்களுக்கு காலை மற்றும் மாலை நேரத்தில் விளையாட்டுகளில் ஈடுபடுவதற்கும் கல்லுாரியின் எதிரே விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது.
அங்கு கல்லுாரி மாணவர்கள் பேஸ்கட் பால், வாலிபால் விளையாடும் இடத்தை தவிர்த்து மற்ற சுற்றியுள்ள இடங்கள் முழுவதும் செடி, கொடிகள் வளர்ந்து புதர்களாக காட்சி அளிக்கிறது.
விளையாட்டு மைதானம் சுற்றிலும் நடைபயிற்சி செய்வதற்கான தளம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் முறையான பராமரிப்பின்றி காணப்படுகிறது.
இதனால் பாம்பு, தேள் போன்ற விஷ சந்துகள் உலாவும் நிலையால் விளையாட்டு மைதானத்தை முறையாக பயன்படுத்த முடியாத நிலையும், விளையாட்டு பயிற்சியில் ஈடுபட முடியாமல் போனது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த முதலமைச்சர் விளையாட்டு போட்டிகளில் வாலிபால், கிரிக்கெட் போட்டிகளில் மருத்துவ கல்லுாரி மாணவர்கள் முதல் மூன்று இடங்களை பிடித்து வெற்றி பெற்றனர்.
விளையாட்டில் ஆர்வம் உள்ள மருத்துவ கல்லுாரி மாணவர்கள் சிலர், முறையாக விளையாட்டு மைதானம் இல்லாத சூழ்நிலையிலும் கல்லுாரி மாணவர்களுக்கு இடையேயான போட்டிகளில் வெற்றி பெறும் நிலையில் மைதானம் இருந்தால் முறையான பயிற்சியுடன் போட்டிகளில் பங்கேற்பதற்கு வாய்ப்பாக அமையும்.
எனவே, அரசு மருத்துவ கல்லுாரி விளையாட்டு மைதானத்தை சீரமைத்து முறையாக பராமரித்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

