/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சி அரசு கல்லுாரியில் மண்டல விளையாட்டு போட்டி
/
கள்ளக்குறிச்சி அரசு கல்லுாரியில் மண்டல விளையாட்டு போட்டி
கள்ளக்குறிச்சி அரசு கல்லுாரியில் மண்டல விளையாட்டு போட்டி
கள்ளக்குறிச்சி அரசு கல்லுாரியில் மண்டல விளையாட்டு போட்டி
ADDED : ஜன 02, 2025 06:19 AM

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி அரசு கல்லுாரியில் அண்ணாமலை பல்கலைக்கழக மண்டல அளவில் பெண்களுக்கான மேஜை பந்து போட்டிகள் நடந்தது.
கள்ளக்குறிச்சி சடையம்பட்டு அரசு கல்லுாரியில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் விழுப்புரம், கடலுார் மண்டலங்களுக்கு இடையேயான மேஜை பந்து போட்டிகள் நடத்தப்பட்டது. இரு மண்டலங்களை சேர்ந்த 8 கல்லுாரி அணிகள் பங்குபெற்ற போட்டிகளை கல்லுாரி முதல்வர் முனியன் தலைமை தாங்கி துவக்கினார். மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் விழுப்புரம் ஜோதிபிரியா, கடலுார் இளவரசி முன்னிலை வகித்தனர்.
போட்டிகளின் நிறைவில், கடலுார் செயின்ட் ஜோசப் கல்லுாரி முதலிடம், கடலுார் பெரியார் அரசு கலைக்கல்லுாரி இரண்டாமிடம், மயிலாடுதுறை தர்மபுரம் ஞானாம்பிகை அரசு கலைக் கல்லுாரி மூன்றாமிடம் பிடித்தனர்.
வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கள்ளக்குறிச்சி கல்லுாரி முதல்வர் முனியன், கல்லுாரி வணிகவியல் துறைத்தலைவர் வீரலட்சுமி, நுாலகர் அசோக்குமார் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
போட்டிகளை கல்லுாரி உடற்கல்வி இயக்குனர் சரவணன் ஒருங்கிணைத்தார்.

