/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சி ஹிந்து முன்னணி மாவட்ட பொதுக்குழு கூட்டம்
/
கள்ளக்குறிச்சி ஹிந்து முன்னணி மாவட்ட பொதுக்குழு கூட்டம்
கள்ளக்குறிச்சி ஹிந்து முன்னணி மாவட்ட பொதுக்குழு கூட்டம்
கள்ளக்குறிச்சி ஹிந்து முன்னணி மாவட்ட பொதுக்குழு கூட்டம்
ADDED : ஜன 17, 2025 06:56 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட ஹிந்து முன்னணி சார்பில் மாவட்ட பொதுக்குழுக்கூட்டம் நடந்தது.
கள்ளக்குறிச்சி பாரத மாதா நுாலகத்தில் நடந்தமாவட்ட பொதுக்குழுக்கூட்டம் மற்றும் ஆலோசனை கூட்டத்திற்கு ஹிந்து முன்னணி மாவட்ட பொது செயலாளர் சக்திவேல் தலைமை தாங்கினார்.
மாவட்ட துணை தலைவர் முத்தையன், மாவட்ட செயலாளர்கள் பாலகிருஷ்ணன், ஐயப்பன், மணிகண்டன் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் குமார் வரவேற்றார்.
ஹிந்து முன்னணி மாநில செயலாளர் மணலி மனோகர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.
கூட்டத்தில் திருநாவலுார் சிவன் கோவிலில் அனுமதியின்றி கோவில் சொத்துக்களை விற்பனை செய்த இந்து சமய அறநிலைத்துறை அதிகாரி மதினாவை கைது செய்ய வேண்டும். இந்த கோவிலை சுற்றி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி, இரவு நேர காவலாளிகளை பணியமர்த்த வேண்டும்.
பகண்டை கூட்ரோட்டில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள ஜெப கூடத்தை அகற்ற கோரி பல முறை புகார் மனுகொடுத்தும் நடவடிக்கை எடுக்காத அரசு அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, ஜெப கூடத்தை அகற்ற வேண்டும்.
கள்ளக்குறிச்சி சிதம்பரேஸ்வரர் சிவன் கோவிலின் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். அந்த கோவிலுக்கு தேர் செய்ய நிதி ஒதுக்கியும், பணிகளை துவங்காமல் உள்ளனர். இதனை உடன் துவங்க வேண்டும்.
சங்கராபுரம் ஒன்றியம் புத்துராம்பட்டு அம்மன் கோவிலில் நடந்த திருட்டு சம்பவங்கள் மீது போலீசாரின் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
நகர தலைவர் செந்தில் நன்றி கூறினார்.