/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சி சட்டம் ஒழுங்கு ஆய்வுக் கூட்டம்
/
கள்ளக்குறிச்சி சட்டம் ஒழுங்கு ஆய்வுக் கூட்டம்
ADDED : டிச 31, 2025 04:15 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் சட்டம், ஒழுங்கு தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடந்தது.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில், இந்து சமய அறநிலையத்துறை, வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்பில் சட்டம் ஒழுங்கு நேரங்களில் மேற் கெள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை கள் மற்றும் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
அதேபோல் மாவட்டத்தில் நடைபெறவுள்ள பல்வேறு முக்கிய நிகழ்வுகள், முன் அனுமதி மற்றும் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளுக்கு மேற் கொள்ள வேண்டிய துரித நடவடிக்கைகள் தொடர்பாக அலுவலர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தனலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.

