/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சியில் வெள்ள நிவாரணத்திற்கு தேவை ரூ.49 கோடி! மாவட்ட நிர்வாகம் தமிழக அரசிடம் கேட்ப்பு
/
கள்ளக்குறிச்சியில் வெள்ள நிவாரணத்திற்கு தேவை ரூ.49 கோடி! மாவட்ட நிர்வாகம் தமிழக அரசிடம் கேட்ப்பு
கள்ளக்குறிச்சியில் வெள்ள நிவாரணத்திற்கு தேவை ரூ.49 கோடி! மாவட்ட நிர்வாகம் தமிழக அரசிடம் கேட்ப்பு
கள்ளக்குறிச்சியில் வெள்ள நிவாரணத்திற்கு தேவை ரூ.49 கோடி! மாவட்ட நிர்வாகம் தமிழக அரசிடம் கேட்ப்பு
ADDED : டிச 29, 2024 11:05 PM

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது.
இதில் அதிகளவில் நடப்பாண்டு வேளாண் பயிர்களான உளுந்து, நெல், கரும்பு, மக்காசோளம், பருத்தி, நிலக்கடை உள்ளிட்ட பல்வேறு வகையில் மொத்தம் 2 லட்சத்து 71 ஆயிரத்து 122 ஏக்கர் பரப்பளவில் பயிர் சாகுபடி செய்யப்பட்டது.
அதேபோல் தோட்டக்கலை பயிர்களில் அதிகளவில் மரவள்ளி, மஞ்சள், வாழை, சேப்பங்கிழங்கு, சின்ன வெங்காயம், தர்பூசணி, கோலியாஸ் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் மொத்தம் 62 ஆயிரத்து 170 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்தனர்.
மாவட்டத்தில், பெஞ்சல் புயல் காரணமாக தொடர்ந்து பலத்த மழை பெய்தது. அதில் கோமுகி, மணிமுக்தா அணைகள் நிரம்பி ஆறு வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டதால், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
அதேபோல் சாத்தனுார் அணை திறக்கப்பட்டதால், மூங்கில்துறைப்பட்டு, திருக்கோவிலுார் பகுதியில் உள்ள தென்பென்னையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு, ஆற்றையொட்டிய கிராமங்கள், விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்து பெரும் சேதங்களை ஏற்படுத்தியது.
இதனையடுத்து விவசாய சாகுபடி நிலங்களில் மழை நீர் மற்றும் ஆற்று வெள்ளம் புகுந்து பயிர்கள் சேதம் தொடர்பாக வேளாண் மற்றும் தோட்டக்லை துறை அலுவலர்கள், அந்தந்த கிராம வி.ஏ.ஓ.,க்களுடன் இணைந்து கணக்கெடுப்பு பணிகள் மேற்கொண்டனர்.அதில், வேளாண் பயிர்களில் 30 ஆயிரத்து 798 விவசாயிகள் சாகுபடி செய்திருந்த 76 ஆயிரத்து 995 ஏக்கர் பரப்பிலான பயிர்கள் சேதமாகி உள்ளதாக கணக்கிடப்பட்டு, நிவாரணத்திற்கு 34 கோடியே 49 லட்சம் ரூபாய் கோரப்பட்டுள்ளது.
அதேபோல் தோட்டக்கலை பயிர்களில் 12 ஆயிரத்து 678 விவசாயிகளின் 21 ஆயிரத்து 120 ஏக்கர் பரப்பில் சேதமாகி இருப்பதாக கணக்கிடப்பட்டு, நிவாரணத்திற்கு 14 கோடியே 52 லட்சத்து 22 ஆயிரத்து 285 ரூபாய் கோரப்பட்டுள்ளது.
பெஞ்சல் புயல் மழையால் பாதிப்புக்குள்ளான 98 ஆயிரத்து 115 ஏக்கர் பரப்பளவிலான பயிர் சாகுபடி நிலங்களுக்கு 43 ஆயிரத்து 476 விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் மொத்தம் ரூ.49 கோடி ரூபாய் மதிப்பீடு செய்து தமிழக அரசிடம் கோரப்பட்டுள்ளது.