/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மருத்துவமனையில் குழந்தை இறப்பு கள்ளக்குறிச்சி போலீசார் விசாரணை
/
மருத்துவமனையில் குழந்தை இறப்பு கள்ளக்குறிச்சி போலீசார் விசாரணை
மருத்துவமனையில் குழந்தை இறப்பு கள்ளக்குறிச்சி போலீசார் விசாரணை
மருத்துவமனையில் குழந்தை இறப்பு கள்ளக்குறிச்சி போலீசார் விசாரணை
ADDED : ஜூலை 31, 2025 04:04 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு மகப்பேறு மருத்துவமனையில் ஒன்றரை வயது குழந்தை இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அருகே சின்னகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை, 40; இவரது ஒன்றரை வயது குழுந்தை விஷ்ணுபிரியாவுக்கு, கடந்த 27ம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்து, பின்னர் மேல்சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி மகப்பேறு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று மாலை 4:00 மணிக்கு குழந்தை இறந்தது.
எம்.ஆர்.ஐ., ஸ்கேன் எடுக்க குழந்தையை மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு நேற்று கொண்டு சென்றனர். அங்கு 3 முறை மருந்து செலுத்தி ஸ்கேன் செய்த பின், ஆம்புலன்ஸ் இல்லாததால் பைக் மூலம் குழந்தையை மகப்பேறு மருத்துவமனைக்கு குழந்தையை அனுப்பி வைத்ததாகவும், ஆம்புலன்ஸ் இன்றி, ஆக்ஸிஜன் வழங்கப்படாமல் பைக்கில் குழந்தையை கொண்டு வந்ததால் இறந்தது என, குழந்தையின் தாய் தனலட்சுமி தெரிவித்தார்.
இது தொடர்பாக மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை டீன் பவானி கூறுகையில், உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு உரிய சிகிச்சை அளித்தும், திடீரென இறந்து விட்டது.
குழந்தையை பைக்கில் அழைத்து வந்தது தொடர்பாக விசாரணை நடத்தி, சம்மந்தப்பட்ட டாக்டர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பிரேத பரிசோதனை அறிக்கையில் குழந்தை இறந்ததற்கான காரணம் தெரியும் என தெரிவித்தார்.
இச்சம்பவத்தால் மகப்பேறு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து, கள்ளக்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

