மாநில வில்வித்தை போட்டியில் கள்ளக்குறிச்சி மாணவர்கள் சிறப்பிடம்
மாநில வில்வித்தை போட்டியில் கள்ளக்குறிச்சி மாணவர்கள் சிறப்பிடம்
ADDED : மார் 22, 2026 09:29 PM

கள்ளக்குறிச்சி: மாநில அளவிலான வில்வித்தை போட்டியில் கள்ளக்குறிச்சி மாணவர்கள் சிறப்பிடம் பிடித்தனர்.
மதுரை வல்லப வித்யாலயா சி.பி.எஸ்.இ., பள்ளியில் தமிழக அளவிலான 19 வது வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இதில் கள்ளக்குறிச்சி வி.எஸ்., பயிற்சி மையத்தை சேர்ந்த மாணவர்கள் 8 மற்றும் 10 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவுகளில் பங்கேற்றனர். தமிழகத்தில் இருந்து ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர். இறுதிப்போட்டியில் 10 வயதுக்குட்பட்டோர் பிரிவில் மாணவர் கிரிஷ் 360 க்கு 336 புள்ளிகள் பெற்று மாநில அளவில் 11வது இடம் பிடித்தார். அதேபோல் 8 வயதுக்குட்பட்டோர் பிரிவில் மாணவர்கள் அதீப் 360 க்கு 299 புள்ளிகளுடன் 40வது இடம், ஆதவ் 360க்கு 297 புள்ளிகளுடன் 43 வது இடத்தை பெற்றனர். இவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன.
மாவட்டத்திற்குப் பெருமை சேர்த்த இளம் வீரர்களின் வெற்றி, தேசிய அளவிலான போட்டிகளுக்கு செல்வதற்கான முக்கிய அடித்தளமாக அமைந்துள்ளது என பயிற்சியாளர் பாராட்டினர். வருங்காலத்தில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று பதக்கம் வெல்வதே இலட்சியம் என மாணவர்கள் தெரிவித்தனர்.
