/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தேசிய அளவிலான கராத்தே போட்டி கள்ளக்குறிச்சி மாணவர்கள் வெற்றி
/
தேசிய அளவிலான கராத்தே போட்டி கள்ளக்குறிச்சி மாணவர்கள் வெற்றி
தேசிய அளவிலான கராத்தே போட்டி கள்ளக்குறிச்சி மாணவர்கள் வெற்றி
தேசிய அளவிலான கராத்தே போட்டி கள்ளக்குறிச்சி மாணவர்கள் வெற்றி
ADDED : ஆக 14, 2025 01:02 AM

கள்ளக்குறிச்சி : தேசிய அளவிலான காரத்தே போட்டியில் கள்ளக்குறிச்சி ஜப்பான் ஷிட்டோ ரியோ கராத்தே பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.
சுதந்திர தின விழாவையொட்டி, வேலுார் மாவட்ட ஜோலார்பேட்டையில், ஜப்பான் ஷிட்டோ ரியோ கராத்தே சார்பில், தேசிய அளவிலான கராத்தே போட்டி மற்றும் பிளாக் பெல்ட் வழங்கும் விழா நடந்தது. போட்டிகளை முன்னாள் அமைச்சர் வீரமணி, கராத்தே போட்டி நடுவர் ரமேஷ் துவக்கி வைத்தனர்.
தமிழகம் முழுவதிலிமிருந்து 800கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்ட போட்டிகளில், கள்ளக்குறிச்சி ஜப்பான் ஷிட்டோ ரியோ கராத்தே பள்ளி 30 மாணவர்கள் மாஸ்டர் பாஸ்கர் தலைமையில் பங்கேற்றனர். இதில், மாணவர்கள் பிரியங்கா, பிரார்த்தனா, வர்சிகா, வர்ஷா, சிம்மு, ராக்கேஷ், விஷ்வா, தனபால், சுந்தரம், கோகுல் ஆகியோர் பிளாக் பெல்ட் பெற்றனர்.
ஹஸ்ஸானா, பிரியங்கா, ராம்குமார், அரவிந்த், சிராஜ் ஆகியோர் போட்டிகளில் முதல் பரிசும், சின்னதுரை, ஹசுருல்ஈன், கோகுல் 2ம் பரிசு பெற்றனர். இப்ராஹீம், கயிலை குமரன், பிரகதீஷ், கலைவாணன், முகிலன், புவனேஷ், கனிஷ்கர், விதுன் சக்கரவர்த்தி ஆகியோர் 3ம் பரிசு பெற்றனர். பரிசு பெற்ற மாணவர்களுக்கு நினைவு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப் பட்டது.