/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தேசிய அளவிலான சிலம்பம் போட்டி கள்ளக்குறிச்சி மாணவர்கள் வெற்றி
/
தேசிய அளவிலான சிலம்பம் போட்டி கள்ளக்குறிச்சி மாணவர்கள் வெற்றி
தேசிய அளவிலான சிலம்பம் போட்டி கள்ளக்குறிச்சி மாணவர்கள் வெற்றி
தேசிய அளவிலான சிலம்பம் போட்டி கள்ளக்குறிச்சி மாணவர்கள் வெற்றி
ADDED : ஆக 20, 2025 10:58 PM

சங்கராபுரம்,; தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் கள்ளக்குறிச்சி மாணவ, மாணவிகள் வெற்றி பெற்றனர்.
தென்னிந்திய பாரம்பரிய சிலம்ப விளையாட்டு கழகம் சார்பில் தேசிய அளவிலான சிலம்பம் போட்டி ஸ்ரீபெரும்புதுாரில் நடந்தது. தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 250க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சூரியா ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் பயிற்றுனர் சூர்யமூர்த்தி தலைமையில், 47 மாணவர்கள் பங்கேற்றனர்.
இதில், ஒற்றைக்கம்பு, இரட்டைக்கம்பு, வேல்கம்பு, மான்கொம்பு, தொடுமுறை என வயது அடிப்படையில் பல்வேறு பிரிவுகளில் போட்டி நடந்தது. கள்ளக்குறிச்சி மாணவர்கள் 17 பேர் முதலிடமும், 16 பேர் இரண்டாம் இடம், 16 பேர் மூன்றாம் இடம் பிடித்தனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை தென்னிந்திய பாரம்பரிய சிலம்ப விளையாட்டு கழக மாநில தலைவர் ரேணுகோபால், மாவட்ட தலைவர் சுதாகரன், பயிற்சியாளர் சூர்யமூர்த்தி ஆகியோர் பாராட்டினர்.