விவசாய பணி செய்து ஓட்டு சேகரித்த கள்ளக்குறிச்சி வி.சி., வேட்பாளர் மாலதி
விவசாய பணி செய்து ஓட்டு சேகரித்த கள்ளக்குறிச்சி வி.சி., வேட்பாளர் மாலதி
ADDED : ஏப் 11, 2026 10:23 PM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி தொகுதி தி.மு.க., வேட்பாளர் மாலதி, விவசாயிகளின் நலனுக்காக தி.மு.க., தெரிவித்துள்ள வாக்குறுதிகளைக் கூறி விவசாய பணிகளை செய்தபடி ஓட்டு சேகரித்தார்.
சடையம்பட்டு கிராமத்தில் அவர் பேசுகையில், 'கடந்த 5 ஆண்டுகால தி.மு.க., ஆட்சியில் விவசாயிகளின் நலனுக்காக எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்படும் பயிர்களுக்கு இழப்பீட்டு தொகை உயர்த்தி வழங்கப்படும். கொள்முதல் விலை உயர்த்தி, நெல் ஒரு குவிண்டால் 3,500 ரூபாயும், ஒரு டன் கரும்புக்கு 4,500 ரூபாயும் வழங்கப்படும்.
ஒன்றியங்களில் புதிய உழவர் சந்தை அமைக்கப்படும். வேளாண் இயந்திரம் மற்றும் கருவிகள் வாங்க ஒன்றரை லட்சம் விவசாயிகளுக்கு மானியம் உட்பட 36 வாக்குறுதிகள் கூறப்பட்டுள்ளன. விவசாயிகளின் தோழனா உள்ள தி.மு.க., விற்கு ஆதரவளிக்கும் வகையில், தேர்தலில் பானை சின்னத்தில் ஓட்டளிக்க வேண்டும்' என்றார்.
முன்னாள் எம்.எல்.ஏ., அழகுவேலுபாபு, வி.சி., மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர். தொடர்ந்த, நல்லாத்துார், குதிரைச்சந்தல், காரனுார் உட்பட 19 ஊராட்சிகளில் ஓட்டு சேகரித்தார்.
