/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஆசியா மாற்றுத்திறனாளிகள் போட்டி கள்ளக்குறிச்சி வீராணைகள் வெற்றி
/
ஆசியா மாற்றுத்திறனாளிகள் போட்டி கள்ளக்குறிச்சி வீராணைகள் வெற்றி
ஆசியா மாற்றுத்திறனாளிகள் போட்டி கள்ளக்குறிச்சி வீராணைகள் வெற்றி
ஆசியா மாற்றுத்திறனாளிகள் போட்டி கள்ளக்குறிச்சி வீராணைகள் வெற்றி
ADDED : ஆக 07, 2025 02:41 AM

கள்ளக்குறிச்சி: ஆசியா மாற்றுத்திறனாளிகள் போட்டியில் வெற்றி பெற்ற கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் வீராங்கனைகள் கலெக்டரிடம் வாழ்த்துப் பெற்றனர்.
மலேசியாவில் கடந்த ஜூன் 31ம் ஆசியா அளவிலான மாற்றுத்திறனாளிகள் டேக்வாண்டோ விளையாட்டு போட்டி நடந்தது. இதில், பி.72 பெண்கள் பிரிவில் கள்ளக்குறிச்சி மாவட்டம், ஏமப்பேர் பகுதியைச் சேர்ந்த ராதா வெள்ளி பதக்கமும், அருணா வெண்கல பதக்கம் பெற்று சாதனை படைத்தனர்.
பதக்கம் வென்ற இருவரும் கலெக்டர் பிரசாந்த்தை நேரில் சந்தித்து வெற்றி பெற்றதிற்கான சான்றிதழை காண்பித்து வாழ்த்து பெற்றனர். இதேபோல் கடந்த 2024ம் ஆண்டு நவ.26 மற்றும் 27ஆம் தேதி பக்ரைன் நாட்டில் நடந்த முதல் உலக மாற்றுத்திறனாளிகள் டேக்வாண்டோ பூம்சே சாம்பியன்ஷிப் போட்டியில், பெண்கள் பிரிவில் அருணா வெள்ளி பதக்கமும், ராதா வெண்கல பதக்கம் வென்றனர்.
இருவரையும் கலெக்டர் பிரசாந்த் வாழ்த்தி பாராட்டினார்.