/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கல்வராயன்மலை திட்டங்கள் : கலெக்டர் ஆய்வு
/
கல்வராயன்மலை திட்டங்கள் : கலெக்டர் ஆய்வு
ADDED : ஜூன் 26, 2025 02:32 AM

கள்ளக்குறிச்சி: கல்வராயன்மலை வட்டாரத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடந்தது.
கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், சிறப்பு தொகுதி மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் அமைக்கப்படும், 25 புதிய அங்கன்வாடி மையங்கள் மற்றும் கால்நடை மருத்துவக்கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மூலம் செயல்படுத்தப்படும் பன்றி, ஆடு, கோழி வளர்ப்பு திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அதில் பயன்பெறும் பயனாளிகள் குறித்து கலெக்டர் விவாதித்தார்.
தொடர்ந்து, நடப்பாண்டில் கூடுதலாக மேற்கொள்ள வேண்டிய புதிய திட்டங்கள் குறித்து அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
மேலும் இத்திட்டங்களின் பணிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்தும், திட்டங்கள் முறையாக பொதுமக்களை சென்று சேர்வதை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
கூட்டத்தில் கூட்டுறவுத் துறை மண்டல இணை பதிவாளர் முருகேசன், வேளாண் இணை இயக்குநர் சத்தியமூர்த்தி, கால்நடை மருத்துவர் கந்தசாமி உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.