/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
காமராஜர் பிறந்த நாள் கருத்தரங்கம்
/
காமராஜர் பிறந்த நாள் கருத்தரங்கம்
ADDED : ஜூலை 22, 2025 07:41 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட காங்., சார்பில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு கருத்தரங்கம் நடந்தது.
கே.வி.எம்., திருமண மண்டபத்தில்,'காமராஜர் ஒரு சகாப்தம்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.
காங்., மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்தமிழ் கண்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ், வட்டார தலைவர் சரண்ராஜ், மருத்துவர் அணி மாவட்ட தலைவர் சுகுமார், மாவட்ட செயலாளர் மாத்துார் சின்னையன், நகர மன்ற உறுப்பினர் தேவராஜ் முன்னிலை வகித்தனர்.
மாவட்டச் செயலாளர் குணசேகர் வரவேற்றார். காங்., மாநிலத் துணைத்தலைவர் மணிரத்தினம் கருத்தரங்கு நடுவராகபங்கேற்றார். மாவட்ட நிர்வாகிகள் மோகன்தாஸ், இளையராஜா, இதயத்துல்லா, ராஜ்மோகன்,சீனிவாசன்,செல்வராஜ் ஆகியோர், காமராஜரின் பெருமைகள் குறித்து பேசினர்.
கட்சி நிர்வாகிகள் ராமதாஸ், குணசேகர், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இளைஞரணி நகரத் தலைவர் கவிநிலவு ராஜ்குமார் நன்றி கூறினார்.