ADDED : ஜூலை 15, 2025 09:26 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார்; காமராஜர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திருக்கோவிலுார் தொகுதி காங்., சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
திருக்கோவிலுார் நான்கு முனை சந்திப்பில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. மாநில பொதுக்குழு உறுப்பினர் முருகன் தலைமை தாங்கினார். வட்டார தலைவர்கள் தஸ்தகீர், பழனி, சற்குருநாதன், ஜெயக்குமார், பாவாடை முன்னிலை வகித்தனர்.
மாநில சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் வாசிம் ராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். மகளிர் அணி மாவட்ட தலைவர் லதா பீட்டர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதே போல் தேவியகரம் கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் செல்வராஜ், வீரவேல், ரியாஸ் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.