ADDED : ஜூலை 17, 2025 06:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : கனியாமூர் டி.எஸ்.எம்., கல்வியியல் கல்லுாரியில் காமராஜர் பிறந்த நாள் விழா நடந்தது.
கல்லுாரி தாளாளர் மனோகர்குமார் தலைமை தாங்கினார். செயலாளர் அசோக்குமார் முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் வெங்கடேசன் வரவேற்றார். காமராஜரின் பிறந்தநாளையொட்டி அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, காமராஜர் பற்றி பேச்சு, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டது. கல்வி வளர்ச்சி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. நிகழ்ச்சியில், துணை முதல்வர் ராமு, பேராசிரியர்கள் செல்வம், பிரபாகரன், சிவராமன், அர்ச்சனா, தேவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.