/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
இமாகுலேட் கல்லுாரியில் கம்பன் கழக பெருவிழா
/
இமாகுலேட் கல்லுாரியில் கம்பன் கழக பெருவிழா
ADDED : ஆக 18, 2025 12:24 AM

சங்கராபுரம்; விரியூர் இமாகுலேட் கல்லுாரியில் மாவட்ட கம்பன் கழகம் சார்பில் கம்பன் கழக பெருவிழா நடந்தது.
நிகழ்ச்சிக்கு கம்பன் கழக மாவட்ட தலைவர் சுலைமான் தலைமை தாங்கினார். கல்லுாரி செயலாளர் புருசம்மாள், கல்லுாரி முதல்வர் லில்லிமேரி, கம்பன் கழக துணைத்தலைவர் கோமுகிமணியன், ஊராட்சி தலைவர் அலெக்சாண்டர், தியாகதுருகம் கம்பன் கழக தலைவர் நடேசன், வணிகர் பேரவை மாவட்ட பொருளாளர் முத்துக்கருப்பன் முன்னிலை வகித்தனர்.
செயலாளர் மதிவாணன் வரவேற்றார். கம்பன் கழக துணைத்தலைவர் கோவிந்தராசன் மற்றும் சண்முகசுந்தரம், சாந்தகுமார், நாஞ்சில் சம்பத் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் சிறப்புரையாற்றினர். தொடர்ந்து, மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஆராவமுதன், ரங்கராஜன், குசேலன், ஆசிரியர் லட்சுபதி, புகழேந்தி, நெடுஞ்செழியன், சாதிக்பாட்ஷா, சவுந்தர்ராஜன், சண்முகம்பிள்ளை உட்பட பலர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியை கலைமகள் காயத்ரி, ராபியா தொகுத்து வழங்கினர்.