/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
டி.எஸ்.எம்., கல்வியியல் கல்லுாரியில் கம்பன் தமிழ் இலக்கிய மன்ற விழா

ADDED : பிப் 21, 2024 10:22 PM

கள்ளக்குறிச்சி : டி.எஸ்.எம்., கல்வியியல் கல்லுாரியில் கம்பன் தமிழ் இலக்கிய மன்ற விழா நடந்தது.
சின்னசேலம் அடுத்த கனியாமூர் டி.எஸ்.எம்., கல்வியியல் கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சிக்கு, குஷால் கல்வி அறக்கட்டளை தாளாளர் மனோகர்குமார் தலைமை தாங்கினார். அறக்கட்டளை செயலாளர் அசோக்குமார், கல்லுாரி முதல்வர் வெங்கடேசன் முன்னிலை வகித்தனர்.
மாணவ ஆசிரியை நிர்மலா வரவேற்றார். கள்ளக்குறிச்சி அரசு கலை கல்லுாரி தமிழ்த்துறை தலைவர் மோட்சஆனந்தம் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் கவிதை, கரகாட்டம், குழு நடனம், வினாடி-வினா, பாடல் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழச்சிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
மாணவ ஆசிரியர் சுபாஷ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியை அண்ணாகலியன் ஒருங்கிணைத்தார். பேராசிரியர்கள் ராமு, தேவி, செல்வம், பிரபாகரன், சிவராமன், அர்ச்சனா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மாணவ ஆசிரியர் சத்யா நன்றி கூறினார்.