ADDED : அக் 29, 2025 11:29 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்:  சங்கராபுரம் பகுதி முருகன் கோவில்களில் கந்த சஷ்டியை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம் நடந்தது.
கந்த சஷ்டியை முன்னிட்டு சங்கராபுரம் சன்னதி தெருவில் உள்ள முருகன் கோவில், தேவபாண்டலம் குந்தவேல் முருகன் கோவில், பாண்டவனேஸ்வரர் கோவிலில், முருகன் வள்ளி தெய்வானை சுவாமிகளுக்கு நேற்று முன்தினம் காலை பால், தயிர், இளநீர் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

