/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கனியாமூர் பள்ளி மாணவி உயிரிழந்த வழக்கு நவ.,27க்கு ஒத்திவைப்பு
/
கனியாமூர் பள்ளி மாணவி உயிரிழந்த வழக்கு நவ.,27க்கு ஒத்திவைப்பு
கனியாமூர் பள்ளி மாணவி உயிரிழந்த வழக்கு நவ.,27க்கு ஒத்திவைப்பு
கனியாமூர் பள்ளி மாணவி உயிரிழந்த வழக்கு நவ.,27க்கு ஒத்திவைப்பு
ADDED : அக் 08, 2025 06:55 AM
கள்ளக்குறிச்சி; கனியாமூர் சக்தி பள்ளி மாணவி உயிரிழந்த வழக்கு விசாரணை வரும் நவ., 27ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்த மாணவி ஸ்ரீமதி, 2022ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி மர்மமான முறையில் இறந்தார்.
மாணவி இறப்புக்கு நியாயம் கேட்டு நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. மாணவியின் தாய் செல்வி அளித்த புகாரில், மாணவி இறந்தது தொடர்பாக பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன், ஆசிரியர்கள் ஹரிப்பிரியா, கீர்த்திகா ஆகியோர் மீது சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்கு பதிந்து கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
இதற்கிடையே இவ்வழக்கில் இருந்து ஆசிரியர்கள் கீர்த்திகா, ஹரிப்பிரியா ஆகியோர் நீக்கப்பட்டனர். இவ்வழக்கு விசாரணை கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நேற்று நடந்த வழக்கு விசாரணையில் அரசு தரப்பில் வழக்கறிஞர் தேவசந்திரன் ஆஜராகினார்.
பள்ளி நிர்வாகம் தரப்பில் இவ்வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மனு செய்யப்பட்டது. இதற்கு சி.பி.சி.ஐ.டி., போலீசாரை பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வரும் நவ., 24ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
அதுவரை கள்ளக்குறிச்சியில் நடந்து வரும் வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
இதனையொட்டி, கள்ளக்குறிச்சி நீதிபதி ஜெயவேல், வழக்கு விசாரணையை வரும் நவ., 27 ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.