/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கருமாரியம்மன் கோவில் தேர் திருவிழா
/
கருமாரியம்மன் கோவில் தேர் திருவிழா
ADDED : ஜூன் 08, 2025 10:37 PM

ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அருகே, கருமாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ரிஷிவந்தியம் அடுத்த சாத்தப்புத்துாரில் உள்ள கருமாரியம்மன் கோவில் தேர்திருவிழா கடந்த மே, 23ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது.
தொடர்ந்து, மாரியம்மன் மற்றும் காத்தவாராயன் சுவாமி பிறப்பு, திருக்கல்யாண உற்சவம், கழுமரம் ஏறுதல் உள்ளிட்டவைகளும், நாள்தோறும் மூலவர் கருமாரியம்மன் சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும் நடந்தன. உற்சவர் கருமாரியம்மன் மற்றும் விநாயகர் சுவாமிகளை தேரில் எழுந்தருள செய்து, தேர்திருவிழா நடந்தது.
பொதுமக்கள் முக்கிய தெருக்கள் வழியாக தேரினை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.
பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள், விழாக்குழுவினர் செய்தனர்.