/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தார்சாலை அமைத்து தரக்கோரி கருவேலம்பாடி மக்கள் மனு
/
தார்சாலை அமைத்து தரக்கோரி கருவேலம்பாடி மக்கள் மனு
ADDED : ஏப் 28, 2025 10:17 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி::
கருவேலம்பாடி கிராம மக்கள் தார்சாலை வசதி ஏற்படுத்தி தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
மனு விபரம்:
கருவேலம்பாடி, சின்னகருவேலம்பாடி ஆகிய 2 கிராமங்களில் 1000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்களது ஊரில் 30 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட சாலை தற்போது குண்டும், குழியுமாக உள்ளது. மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதால் இரு சக்கர வாகனங்கள் செல்ல மிகவும் சிரமமாக உள்ளது. எனவே, நொச்சிமேட்டில் இருந்து கருவேலம்பாடி வரை 8 கி.மீ., தொலைவிலான மண் சாலையை மாற்றி தார்சாலையாக அமைத்து தர வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

