/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பட்டா வழங்க வலியுறுத்தி கெடிலம் கிராம மக்கள் மனு
/
பட்டா வழங்க வலியுறுத்தி கெடிலம் கிராம மக்கள் மனு
பட்டா வழங்க வலியுறுத்தி கெடிலம் கிராம மக்கள் மனு
பட்டா வழங்க வலியுறுத்தி கெடிலம் கிராம மக்கள் மனு
ADDED : நவ 18, 2025 07:20 AM

கள்ளக்குறிச்சி: திருநாவலுார் பி.டி.ஓ., அலுவலகத்தைச் சுற்றி வசிக்கும் மக்கள், தங்களுக்கு வேறு இடத்தில் பட்டா வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
உளுந்துார்பேட்டை அடுத்த கெடிலம் கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனு:
கடந்த 50 வருடங்களாக திருநாவலுார் பி.டி.ஓ., அலுவலகத்தை சுற்றியுள்ள காலி இடத்தில் 25 குடும்பத்தினர் வீடு கட்டி வசிக்கிறோம். இந்நிலையில் புதிதாக பி.டி.ஓ., அலுவலகம் கட்டுவதற்காக நாங்கள் குடியிருக்கும் வீடுகளை இடிக்க ஏற்பாடு நடந்து வருகிறது.
பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய சூழ்நிலையில் இருப்பதால் வேறு இடத்திற்கு செல்ல முடியாது. எங்கள் வீடுகளை இடிக்கும் பட்சத்தில் குடும்பத்திருடன் வேறு எங்கு செல்வது என்று தெரியவில்லை.
எனவே எங்களுக்கு செம்மனந்தல் ஊராட்சியில் உள்ள புறம்போக்கு இடத்தில் வீட்டு மனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

